Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the onecom-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 621 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 629 Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்என் கண்களில்...

இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும்

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல இலவுகாத்த கிளியாக இலங்கை மக்கள் நிலைமை சீராகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இக்காத்திருப்பு என்றென்றைக்கானதல்ல. இன்று எமது தேசிய இனப்பிரச்சினை அனைத்துத் தரப்புகளாலும் அந்நியச் சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தினாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழ், முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும், கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயத்துறையில் நவ தாராள பொருளாதாரத் திட்டங்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதன் விளைகளை இப்போது நாம் காண்கிறோம். அவற்றின் பாதிப்புகள் காரணமாக மக்கள் தொடர்ச்சியாக அவற்றை எதிர்த்து வருகின்றபோதும் தொடர்ச்சியான அரசாங்கங்கள்; அவற்றை நிறுத்தாது முன்னெடுத்தும் வந்தன. தன்னிறைவை அடிப்படையாகக் கொண்ட தேசியப் பொருளாதாரத்தின் உயிரணுக்களை உலகமயமாதல் என்ற நிகழ்ச்சி நிரல் அழித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளிகள் நடுத்தரவர்க்கத்தினர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும் தாராள தனியார்மய சூழ்நிலையானது எதிர்கால சந்ததிக்கு இந் நாட்டு வளங்கள் விட்டு வைக்கப்படாது என்பதை உறுதி செய்கின்றன. இலங்கையரின் நல் வாழ்க்கை, சுயகௌரவம் சுயமரியாதை, சொத்துக்கள் மற்றும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் அரசியல் யாப்பு, ஜனாதிபதி ஆட்சிமுறை பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகியன முழுமையாகத் தோல்வியடைந்துள்ளன. மக்கள் காய்ந்த சருகாக மாறி வருகிறார்கள். அதன் மீது சிறிய தீப்பொறி பட்டாலேயே பெரிய காட்டுத்தீயை உண்டாக்கி விடும். ஆவ்வாறான ஒரு சிறிய தீயே காலிமுகத்திடலை மையங்கொண்ட போராட்டமாகும். இன்றைய நெருக்கடி உயர் மத்தியதர வர்க்கத்தினருக்கும் பெரும் சொத்துடைய சிலருக்கும் கூட நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.  அதனால் சாதாரண மக்கள் மட்டுமன்றி ஓரளவிற்கு வசதிவாய்ப்புகளுடன் வாழ்கின்றவர்கள் கூட மாற்று அரசியல் நடவடிக்கைகள் மூலமான மாற்றங்களை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். அத்தகைய மாற்று அரசியல் சாத்தியமானதா?

இலங்கையின் ஆளும அதிகார அடுக்கின் பண்பு ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாளர்களாக செயற்படுவதே. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுகின்ற அரசாங்கத்தின் செயல்கள் இதன் அண்மைய உதாரணம். அரசியல்-சமூகத் தளங்களில், அரசின் கொள்கைகள், வன்முறை, யுத்தம், இனக்குரோதம், மதவெறி என்பனவற்றையே பிரதான அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. நிலைமைகளை சீர்செய்வதற்கான சீர்திருத்தங்களையோ இணக்கப்பாடுகளையோ ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் இன்றைய அதிகார அடுக்கின் தலைமைகள் இல்லை.

இத்தகைய அதிகார அடுக்கிற்கு எதிரான உறுதியாக முன்னெடுக்கவேண்டிய போராட்ட வழிமுறைகளுக்கும் பழைய அரசியல் ஸ்தாபனங்களின் நடைமுறைகளுக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய சுரண்டுகின்ற பிற்போக்கு வர்க்கங்களுக்கும் இன்றைய கொள்ளைக்கார பயங்கரவாத அதிகார அடுக்குகளுக்குமிடையே அவற்றின் ஆட்சிமுறை மூலோபாயம் தந்திரோபாயம் போன்றவற்றில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அவ் வித்தியாசங்களைப் பார்க்கின்ற போது மக்கள் சார்பான இன்றைய போராட்ட அணுகுமுறைகள் பொருத்தமானவையா என்ற கேள்வி எழுவது இயற்கையானது.

எனவே மக்களது பழைய அணுகுமுறைகளை முற்றாக மாற்றி புதிய முயற்சிகளும் புதிய திசையில் புதியமாதிரியான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகளின் தொழிற்சங்க இயக்கங்கள், வேலைநிறுத்தப்போராட்டங்கள் தேர்தல் அரசியல்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவை இன்றைய அதிகார அடுக்கின்;; வக்கிரம் நிறைந்த வன்முறைகளுடன் கூடிய அணுகுமுறைகளையே பதிலிறுப்பாகத் தற்துள்ளன. இவை மக்களிடையே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளள.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விதங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் தேர்தல் களங்களுக்கு வெளியிலும் தொழிற்சங்க வரையறைகளுக்கு வெளியிலும் பல போராட்டங்கள் பாரம்பரிய பிரசார ரீதியான விதத்தலன்றி முன்னெடுக்கப்பட வேண்டும். என்.ஜி.ஒக்கள் போன்று குறிப்பிட்ட திட்டவரையறைகளுக்கு உட்பட்ட விதத்திலன்றியும் செயற்படுவது வரலாற்றுத் தேவையாகிறது.

1971, 1988 ஜே.வி.பியின் ஆயுத நடவடிக்கைகளும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டமும் இனிமேல் ஒரு போதும் அவ்வாறான போராட்டங்கள் உருவாகக் கூடாது என்ற விரக்தி நிலையை மக்களிடம் தோற்றுவித்துள்ளன. இதில் அதிகார அடுக்கின்; சக்திகள் வெற்றி பெற்றுள்ளதை மறுக்க முடியாது. ஆனால் சரியான போராட்டத்தால் தற்போதைய ஆட்சிமுறையும் ஆளும் வர்க்கங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டு இலங்கையில் அர்த்தமுள்ள ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்துவதைத் தவிர வேறு தெரிவோ மாற்றுத்திட்டமோ ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இல்லை. அதற்கு தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள் புதிய விதத்தில் புதிய வகைமாதிரியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு வரலாற்றில் கற்ற பாடங்களை மீட்டுப்பார்ப்பதும் அவசியமானது.

தலைமைத்துவங்களின் தவறுகளினால் 1953 ஆகஸ்ட் 12ல் நடைபெற்ற மக்கள் பெருமளவில் பங்கெடுத்த ஹர்த்தால் போராட்டம் வெகுஜன எழுச்சியாக வளரமுடியாமல் போனது பற்றி எமக்கு பட்டறிவிருக்கிறது. 1980 யூலை வேலை நிறுத்தப் போராட்டம் உட்பட பல விதமான வேலைநிறுத்தப் போராட்டங்களும் மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும், ஆர்ப்பாட்டங்களும் எதிர்விளைவுகளைத் தந்த போலி இடதுசாரி சக்திகளினதும் தீயநோக்குடைய என்.ஜி.ஓ அமைப்புகளினதும் நடவடிக்கைகளினால் எதிரிடையாக அதிகார அடுக்கின்; இருப்புக்கு அவை உதவி புரிந்துள்ளன. அதேவேளை வெகுஜன இயக்கங்களினாலும் எதிர்ப்பு போராட்டங்களினாலும் சில உரிமைகள் மக்களுக்கு கிடைத்துள்ளன என்பதையும் குறிப்பிடத்தக்களவான சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றின் தலைமைத்துவங்கள் மக்கள் விரோத சக்திகளின் ஏகபோகத்திற்குள் hட்டுப்பட்டே இருந்தன. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவாக இப் போராட்டங்கள் பயன்பட்டன. தமக்கு வாய்ப்பளிக்கும் வரை அப்போராட்டங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.

இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் அவர்களின் அரசியல் எதிரியான அதிகார அடுக்கும் நேருக்கு நேரெதிராக நிற்கும் அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது. அந்த எதிர்ப்பு அடிப்படையான சமூகமாற்றத்திற்கு குறையாத மாற்றத்தை வேண்டி அதற்கான தீவிரமான அரசியல் தலைமைத்துவ மாற்றத்தின் கீழ் வெகுவிரைவில் புதிய மக்கள் எழுச்சியை வேண்டிநிற்கிறது. இந்த நிலைமை முதிர்ச்சியடைந்து வெற்றிகரமான சூழ்நிலை ஏற்படுவது அனைத்து இலங்கை மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. மக்களால் வேண்டப்படாத, அவர்களின் பங்களிப்பில்லாத மாற்றம் சாத்தியமானதல்ல.

வெகுஜன எழுச்சி, வெகுஜனப் போராட்டம் என்றவுடனே பயங்கரவாத ஆளும் வர்க்கங்களினாலும் இனவாதிகளினாலும் பாசிச வாதிகளினாலும் மிகவும் மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டு விடுவதுடன் என்றுமில்லாதவாறு மேலும் அரச அதிகாரம் பலப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்ற கருத்தும் நாம் வாழும் சமூகத்திலுண்டு. அவ்வாறு சொல்பவர்களுக்கு மக்கள் எழுச்சியென்பது மக்களைப் பாதுகாக்கும் சரியான போராட்ட மார்க்கமாகத் தெரிவதில்லை.

வெகுஜன எழுச்சியை போராட்ட மார்க்கமாக ஏற்றுக்கொள்ளும் நாம் சமூகமாற்றத்திற்கான மக்கள் எழுச்சியின் புதிய அர்த்தத்தை புதிய வடிவத்தை புதிய இயங்கு முறையை பற்றி எமது கவனத்தை செலுத்த வேண்டியவர்களாகின்றோம். மக்கள் எழுச்சியை முறியடிக்க முடியாதளவிற்கு மாற்று பொருளாதார தற்காப்பு, வினை-எதிர்வினை, போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தும் பண்பாட்டு முறைமை போன்றனவற்றை தயாரிப்பது அவசியம். ஆகக்கூடுதலான மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்க செய்யப்படும் வெகுஜன எழுச்சி, மக்களின் நலன்களுக்கான அம்சங்களைக் கொண்டதானதாக அமைய முடியும்.

தயாரில்லாத நிலையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வெகுஜன எழுச்சியும் தற்கொலைக்கு ஒப்பானதாகும். வெகுஜன எழுச்சிகளை எவரும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்த முடியாது. ஒரு வெறும் அறிவிப்பின் மூலம் அல்லது துண்டுப்பிரசுர சுவரொட்டி வேண்டுகோள்கள் அறைகூவல்களின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை வெகுஜன எழுச்சியாக ஏற்படுத்த முடியாது. வெகுஜன எழுச்சிகளை குறிப்பிட்ட திகதி இடம் சம்பவம் எனத் தீர்மானிக்க முடியாது. தேவையான அடிப்படையான நிலைமைகள் ஏற்படும் போது முரண்பாடுகள் கூர்மையடையும் போது நிலத்திலிருந்து வெகுஜன எழுச்சி மேலெழும்புவது தவிர்க்கவியலாது. சமூகமாற்றத்திற்கான வெகுஜன எழுச்சியை எவரும் வலுக்காட்டாயமாக ஏற்படுத்த முடியாது.

அவ்வாறான தயாரான சூழ்நிலை இல்லாத போது மக்களின் எதிரிகள் வெகுஜனப்போராட்டங்களை அவர்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்து அவற்றின் இலக்கான சமூக மாற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். இலங்கை வரலாற்றின் அதிகமான வெகுஜனப்போராட்டங்கள் இரண்டு பெரிய கட்சிகளான ஐ.தே.கவையும் சுதந்திரக்கட்சியையும் மாறி மாறி ஆட்சிக்கு கொண்டுவரவே பயன்படுத்தப் பட்டுள்ளன. என்.ஜி.ஓக்கள், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு வெகுஜனப்போராட்டங்களை பயன்படுத்தியுள்ளன. அவை அதிகாரவர்க்கத்திற்கு உதவுவதாகவே முடிந்துள்ளன. இனியும் அவ்வாறே நிகழுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *