நிகழ்வுகள்

இலத்தீன் அமெரிக்காவில் மதமும் சுற்றுச்சூழல் முரண்பாடுகளும்

இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்ற நிலம் இலத்தீன் அமெரிக்காவினுடையது. ஆந்த வளங்களுக்காகவே அந்நாடுகள் தொடர்ச்சியான சர்வாதிகாரங்களுக்கு உட்பட்டுள்ளன. அமெரிக்காவின் கொல்லை புறமாக அவை அமைந்துள்ளமை அதன் இரண்டாவது துயரம். கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக தங்களது நிலங்களுக்காகவும் அதில் உள்ள இயற்கை வளங்களுக்காகவும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் இலத்தீன் அமெரிக்காவின் சுற்றுச் சூழல் போராட்டங்களுக்கும் அவ்வவ் நாடுகளில் உள்ள மதங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தவர் இவார் பெரி (Evan Barry). இவருடனான உரையாடலுக்கான வாய்ப்பை சர்வதே அபிவிருத்திக்கான பேர்கன் வள நிலையம் ஆகஸ்ட் 22ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கருத்துரைத்த இவான் பெரி ‘தேவாலயம், பல்பார்வை மற்றும் சுற்றுச்சூழல்: தற்கால இலத்தீன் அமெரிக்காவில் மதமும் சமூக முரண்பாடுகளும்’ (Church, Cosmovision and the Environment: Religion and Social conflict in Contemporary Latin America) என்ற தனது நூலை மையப்படுத்திய கருத்துக்களை முன்வைத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இலத்தீன் அமெரிக்காவில் கிறீஸ்தவத்துக்கும் இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு இடையிலான உறவானது தொடர்ச்சியாக மாறுபடும் ஒன்றாகவும் சிக்கலானதாகவும் இருந்து வந்துள்ளது. ஒருபுறம் கத்தோலிக்கச் திருச்சபை இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிச் சிந்தனையின் செல்வாக்கை இல்லாமல் செய்வதற்குக் கங்கணம் கட்டியது. இதனால் இதற்கான எதனுடனும் கைகோர்க்கத் தயாராக இருந்தது. இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்களுடன் திருச்சபையின் கூடிக்குலாவலை இப்பின்னணியிலேயே நோக்க வேண்டியுள்ளது.

இதற்கு மாற்றான சிந்தனையாக விடுதலை இறையியல் (Liberation Theology) தோற்றம் பெற்றது. இன்றும் இது இலத்தீன் அமெரிக்காவில் போராடும் மக்களிடையே செல்வாக்குத் செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. திருச்சபையின் நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்காவில் கத்தோலிக்க பின்பற்றுதல்களிலிருந்து மக்களை அந்நியப்படுத்தியதோடு இவாஞ்சலிக்கல் குழுக்கள் செல்வாக்கும் பெறவும் வழிவகுத்தது.

இக்கதையின் பல்வேறு அம்சங்களை தனது நூலில் பெரி தெளிவுபடுத்துகிறார். இலத்தீன் அமெரிக்காவின் மீது அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாக நான் இதைக் கருதுகிறேன்.

நிகழ்வு தொடர்பான குறிப்புக்கு: http://www.resourcecentre.no/events/religion-and-environmental-conflict-in-latin-america/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *