நூல் அறிமுகம்

போலிச் செய்திகளின் உளவியல்: ஏற்றுக்கொள்ளுதல், பகிர்தல், தவறான தகவல்களைத் திருத்தல்

இன்றைய மிகப்பெரிய சவால்களில் ஒன்று போலிச்செய்திகள். குறிப்பாக உலகம் மெய்நிகர் உலகாக மாறிவிட்ட நிலையில் போலிச்செய்திகளின் உருவாக்கமும் பரவலும் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இதன் உளவியல் பரிமாணங்களை முழுமையான ஆராயும் முதலாவது ஆய்வுரீதியான நூலாக அண்மையில் வெளிவந்துள்ளது, போலிச் செய்திகளின் உளவியல்: ஏற்றுக்கொள்ளுதல், பகிர்தல், தவறான தகவல்களைத் திருத்தல் (The Psychology of Fake News: Accepting, Sharing, and Correcting Misinformation).

போலிச் செய்திகள் அறிவியலுக்கும் அரசியலுக்கும் மட்டுமல்ல, எமது அன்றாட வாழ்வியலிலும் தாக்கங்களைச் செலுத்துகிறது. உண்மைக்கும் பொய்யுக்கும் இடையிலான இடைவெளி இல்லாமலேயே போய்விட்டது. இது எமது மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன. தனிநபர்களாகவும் கூட்டாகவும் இப்போலிச் செய்திகளுக்கு நாம் எவ்வாறு பலியாகிறோம். அது ஏற்படுத்தும் உளவியல் பாதிப்புக்கள் எத்தகையவை, அதன் தீவிரத்தின் தன்மை ஆகியவற்றை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. டுவிட்டரில், படங்களில், கட்டுரைகளில் என வெவ்வேறுபட்ட தளங்களில் போலித்தகவல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வுரீதியாக பேசுகிறது.

இதில் உள்ள முக்கியமான ஒருகட்டுரை போலிச்செய்திகள் எவ்வாறு கூட்டுச்சதிக் கோட்பாடுகள் (conspiracy theories) என்று அறியப்படுகின்ற வாதங்களுக்கு வலுச்சேர்ப்பனவாய் அமைகின்றன என்பதையும் மனிதமனம் உண்மைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக இவ்வாறான கூட்டுச்சதிக் கோட்பாடுகளை மக்கள் நம்ப விரும்புகிறார்கள். இதன் உளவியல் என்ன என்ற வினாவுக்கான விடையை இக்கட்டுரை ஆராய்கிறது. 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 12 கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் இன்றைய சூழலில் நாம் எதிர்நோக்கும் சவாலின் உளவியல் தன்மைகளை விளங்கிக்கொள்ள உதவும் நூல்.

மேலதிக தகவல்களுக்கு:  https://www.routledge.com/The-Psychology-of-Fake-News-Accepting-Sharing-and-Correcting-Misinformation/Greifeneder-Jaffe-Newman-Schwarz/p/book/9780367271831

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *