சமூகம்நூல் அறிமுகம்

நிச்சயமின்மையின் அரசியல்: நிலைமாற்றத்தின் சவால்கள்

இன்றைய காலப்பகுதியில் நிச்சயமின்மை மட்டுமே நிச்சயமானதாக இருக்கிறது. இந்நிலையில் நிச்சயமின்மையைப் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. குறிப்பாக அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை விளங்கிக் கொள்ள நிச்சயமின்மையை விளங்குவது தேவையானது. இதை தற்போதைய கொவிட்-19 நெருக்கடி மிகத் தெட்டத்தெளிவாக விளக்குகிறது. நிச்சயமின்மை என்பது ஒரு அறிவியல் சார்ந்த பிரச்சனையா அல்லது அரசியல் சார்ந்த நெருக்கடியா? நிச்சயமின்மையை நாம் என்ன செய்வது? இக்கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் இயல்பானவை. இன்றைய அரசியலை விளங்குவதற்கு நிச்சயமின்மையை விளங்குவது ஏன் முக்கியமானது என்ற வாதத்தை நிச்சயமின்மையின் அரசியல்: நிலைமாற்றத்தின் சவால்கள் (The Politics of Uncertainty: Challenges of Transformation) என்ற அண்மையில் வெளியான புத்தகம் முன்வைக்கிறது.

வரலாறு நெடுகிலும் நிச்சயமின்மை பற்றிப் பேசி வந்திருக்கிறோம். ஆனால் இந்த நிச்சயமின்மைளை விளங்கிக் கொள்ள நாம் எவ்வளவு தூரம் முன்வந்திருக்கிறோம். இந்த வினாவை இந்தப் புத்தகம் எழுப்புகிறது. இவ்வளவு காலமும் சவால்களையும் ஆபத்துக்களையும் தொழிநுட்பம் சார், அறிவுசார் பிரச்சனையாக மட்டுமே பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி அதன் அரசியல் மிக முக்கியமானது. அதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று நிச்சயமின்மை அரசியல்ரீதியிலான தாக்கங்களையே பெருமளவில் ஏற்படுத்துகின்றது. இந்தப் புத்தகம் நிச்சயமின்மையை அறிவு, பொருள், அனுபவம், உருவகம், நடைமுறை ஆகியவற்றின் ஊடே விளங்கிக் கொள்ளவியலும் என்று வாதிடுகிறது. இன்றைய காலச்சூழலில் சமூக அறிவியல் துறைசார்ந்தோரும் இயற்கை அறிவியல் துறைசார்ந்தோருக்கும் வாசிக்க வேண்டிய ஒரு பயனுன்ன புத்தகம்.

மேலதிக தகவல்களுக்கு: https://www.routledge.com/The-Politics-of-Uncertainty-Challenges-of-Transformation/Scoones-Stirling/p/book/9780367903350

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *