திருப்தி
வாழ்நாள் முழுவதும் போராடினோருக்கு
அதி அழகான விடயம் ஏதெனின்
தம் வாழ்க்கையின் இறுதிக்கு வந்து
“நாம் மக்களையும் வாழ்க்கையையும் நம்பினோம். வாழ்க்கையும் நம்பிக்கையும் நம்மைக்
கைவிடவில்லை” எனக் கூற இயலுவதுதான்
இவ்வாறுதான் மக்களுக்காகவும் வாழ்க்கைக்காகவும்
அல்லும் பகலும் போராடியவாறு,
ஆண்கள் ஆண்களாகின்றனர்,
பெண்கள் பெண்களாகின்றனர்
இவ் வாழ்வுகள் முடிவுக்கு வருகையில்
மக்கள் தங்கள் அதிஆழ நதிகளைத் திறப்பர்
அவர்கள் அந் நீரில் என்றென்றைக்குமாய் நுழைவர்;
அவ்வாறு அவர்கள்
வாழும்;, முன்னுதாரணத்தின் இதயங்களாகும் நெடுந்தொலை நெருப்புக்களாவர்
வாழ்நாள் முழுவதும் போராடினோருக்கு
அதி அழகான விடயம் ஏதெனின்
தம் வாழ்க்கையின் இறுதிக்கு வந்து
“நாம் மக்களையும் வாழ்க்கையையும் நம்பினோம வாழ்க்கையும் நம்பிக்கையும் நம்மைக்
கைவிடவில்லை” எனக் கூற இயலுவதுதான்
மூலம்: ஒட்டோ ரெனெ கஸ்ட்டிலோ
தமிழில்: மீநிலங்கோ